தமிழ்ச்செம்மல் விருதாளரை கருங்குளத்தில் பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
தமிழக அரசு சார்பில் வருடம் தோறும் தமிழுக்கு சிறப்பாக தொண்டாற்றியமைக்காக மாவட்டத்திற்கு ஒரு நபருக்கு தமிழக அரசால் தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்படும்.
2020 ஆம் ஆண்டிற்கான தூத்துக்குடி மாவட்டத்திற்க்கான விருதை செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு கடந்த 1ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவை பல்வேறு அமைப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினம் கருங்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்ச்செம்மல் விருது பெற்ற எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ், செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜசுந்தர் உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


