தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு உட்பட்ட கிராம விழிப்புணர்வு காவலர்கள் மற்றும் கிராம விழிப்புணர்வு கமிட்டி நிர்வாகிகள் இணைந்து கருங்குளம் தனியார் மண்டபத்தில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இந்த விழிப்புணர்வு முகாமிற்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டு தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில்,
தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 7 மாதங்களில் 6 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த 40 நாட்களில் 20க்கும் மேற்பட்டோர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தாமிரபரணி ஆறு வற்றாத ஜீவநதி. இந்த நதி மணல் கொள்ளையால் பாழைடைந்து கிடக்கிறது. தாமிரபரணி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என்று அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் சரகத்திற்கு உட்பட்ட செய்துங்கநல்லூர், சேரகுளம், ஸ்ரீவைகுண்டம், சாயர்புரம், குரும்பூர், ஏரல் காவல் நிலைய காவலர்கள் கலந்து கொண்டனர்.


