
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சிறப்பாக பணியாற்றியதற்கான இன்றைய தினம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் பாராட்டு விழா நடந்தது.
இதில் ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் ஜோசப் ஜெட்சன், மற்றும் காவலர் கார்த்திக் ஆகியோரின் மெச்சதகுந்த பணியை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளள் கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்வன் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.