கிள்ளிகுளம் வேளாண் அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலுள்ள சமூக அறிவியல் துறை சார்பாக ஒரு நாள் பணி திட்டமிடுதல் மற்றும் ஆளுமைத்திறன் ஆய்வு பனிமனை நிகழச்சி நடந்தது.
சமூக அறிவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பொறுப்பு முதல்வர் அருள்மொழியான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் 105 இறுதியாண்டு மாணவர்களும், ஐந்து முதுகலை மாணவர்களும் 12 இணை மற்றும் துணை பேராசிரியர்களும் கலந்துகொண்டனர். அவர்களுக்கு ஆளுமை மதிப்பீடு கருவியானது கொடுக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இணைபேராசிரியர் இராஜசேகரன், துணைபேராசிரியர் ஜெயலெட்சுமி ஆகியோர் வழிகாட்டுதல் பேரில் ஆளுமை மதிப்பீடு கருவியானது மதிப்பீடு செய்யப்பட்டது.