செய்துங்கநல்லூரில் செய்துங்கநல்லூர் – சிவந்திபட்டி சாலை சீரமைக்கப்படுகிறது.
செய்துங்கநல்லூர் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான செய்துங்கநல்லூர் சிவந்திபட்டி சாலை உள்ளது. இந்த சாலையில் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி, செயிண்ட மேரீஸ் கல்வியல் கல்லூரி ஆகியவை உள்ளன. மிகவும் பிரசித்தி பெற்ற சுந்தரபாண்டிய சாஸ்தா கோயில் உள்ளது. மேலும் ஸ்ரீராமன் குளம், குத்துகல், முத்தூர், கொடிக்குளம், சிவந்திபட்டி போன்ற ஊர்களுக்கு செல்ல மிக முக்கிய மான சாலையாக இந்த சாலை விளங்குகிறது. ஆனால் இந்த சாலை மிக மோசமாக உள்ளது. இந்த சாலை நெடுஞ்சாலை துறையினர் கண்டு கொள்ளாத காரணத்தினால் குண்டும் குழியுமாக மாறி விட்டது. எனவே மக்கள் நடந்து செல்ல முடியாதநிலையில் உள்ளது. சில இருசக்கர வாகனங்கள் திருச்செந்தூர் மெயின்ரோட்டில் இருந்து சிவந்தி பட்டி சாலையில் இறங்கும் போதே அங்குள்ள குண்டும் குழியிலும் மாட்டி விபத்துக்குள் சிக்குகிறது. தற்போது இந்த சாலை ஸ்ரீவைகுண்டம் நெடுஞ்சாலை துறை சார்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 50 லட்சம் செலவில் 1 கிலோ மீட்டருக்கு இந்த பணி நடந்து வருகிறது. இந்த பணியை உதவி கோட்ட பொறியாளர் தர்மராஜ், இந்த பணி உதவி பொறியாளர் கணேஷ், சாலை ஆய்வாளர் சுசிலா மேற்பார்வையில் நடந்து வருகிறது.


