செய்துங்கநல்லூரில் உலக சிக்கன நாள் நடந்தது.
செய்துங்கநல்லூர் எம்.எம். நடுநிலைப்பள்ளியில் உலக சிக்கன நாள் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராஜன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் ஹத்தாது முன்னிலை வகித்தார். சிக்னத்தின் அவசியம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபக்குமார் , எட்டாம் வகுப்பு மாணவி இசக்கியம்மாள் ஆகியோர் சிக்கன தினம் குறித்து பேசினர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்துணவு சுல்தான் அலாவுதீன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துலெட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர் . விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
தொடர்பானவை
October 4, 2024