செய்துங்கநல்லூர் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி குளத்துக்கு வரும் உடைந்த கால்வாயை அதிகாரிகள் சீரமைத்தனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக பரவலான மழை பெய்து வருகிறத. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் இரண்டு அணைக்கட்டுகளான மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுகள் நிறைந்து விட்டது. ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை தாண்டி சுமார் 5 ஆயிரம் கனஅடி நீர் வீணாக கடலில் கலக்கிறது.
இந்நிலையில் மருதூர் அணைக்கட்டில் மேலக்காலில் உள்ள முக்கவர் வாய்க்கால் மூலம் முத்தாலங்குறிச்சி குளத்திற்கு தண்ணீர் செல்கிறது. இதன் மூலம் இந்த பகுதியில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கால்வாயில் நேரடியாக படுகையூர், முறப்பநாடு, பக்கப்பட்டி, ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி வடபத்து வழியாக நேரடியாக 200 பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் கடந்த நாள்களில் பெய்த மழையாலும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும் முத்தாலங்குறிச்சி குளம் நிரம்பியது. நேரடி பாசன வசதியில் நடுவை நடும் பணி நடந்து வருகிறது. இதனால் இந்த குளத்திற்கு வரும் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பால் குளத்திற்கு வந்த வாய்க்கால் நீரும், குளத்தின் ஷட்டர் சரியில்லாத காரணத்தினால் குளத்தின் நீரும் வீணாக இந்த உடைப்பில் இருந்து அருகில் நடப்பட்டிருந்த வயல்வெளிகளில் புகுந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், முத்தாலங்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி கந்த சுப்பு, வருவாய் ஆய்வாளர் மேரி ஆகியோர் பொதுப்பணித்துறை மூலமாக மணல் மூட்டை அடுக்கி இந்த அடைப்பை சீர் செய்தனர். மேலும் உடைப்பு விழுந்த இடம் ரோட்டில் இருந்துது 1 கிலோ தொலைவில் இருந்த காரணத்தினால் விவசாயிகள் தலைச்சுமையாக மண்மூட்டையை சுமந்து சென்று அடைப்பை அடைத்தனர். மேலும் ஷட்டர் அடைக்க வேண்டிய ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை மூலம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அதிகாரிகள் உள்ள இந்த பகுதியில் உள்ள விவசாய நிலம் பாதிப்பின்றி தப்பியது.