களக்காட்டில் கிராம உதயம் சார்பில் இலவச கண்பரிசோதனை முகாம் நடந்தது.
கிராம உதயம் மற்றும் திருநெல்வேலி அர்விந்த் கண் மருத்துவமனை இணைந்து திருநெல்வேலி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நிதி உதவியுடன் களக்காட்டில் உள்ள மீரானியா நடுநிலைப்பள்ளியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
இந்த முகாமை களக்காடு காவல் உதவி ஆய்வாளர் தேவி தொடங்கி வைத்தார். கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஷ்வரி முன்னிலை வகித்தார். கிராம உதயம் இலவச மருத்துவ துறை பொறுப்பாளர் கணேசன் வரவேற்புரை வழங்கினார். கிராம உதயம் வழக்கறிஞர் புகழேந்தி பகத்சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அர்விந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு கண் பரிசோதனையை பொதுமக்களுக்கு செய்தனர்.