செய்துங்கநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் நம்பிசாமி ஆலயம். இந்த ஆலயத்தில் தை பூசத்திருவிழா நடந்தது. இதையட்டி அதிகாலை சிவன் கோயிலில் இருந்து பால் குடம் எடுத்துவரப்பட்டது. அன்னதான சத்திரம், தென்னஞ்சோலை, அண்ணாநகர், கஸ்பா மேலத்தெரு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கோவில்பத்து மற்றும் செய்துங்கநல்லூர் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது. அதன் பின் உச்சிகால சிறப்பு அபிசேகம் மற்றும் பூஜை நடந்தது. மாலையில் வில்லிசை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இரவு சாம கொடை நடந்தது. மறு நாள் அதிகாலையில் மக்கள் பொங்கலிடும் வைபவம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை நம்பி சாமி கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


