
செய்துங்கநல்லூரை சேர்ந்தவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு இவர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கலியாவூர் அருகே உழக்குடி கிராமம் உள்ளது. உழவர் குடி என்ற பெயர் மருவி உழக்குடி என்றானது. இப்பகுதியில் கல் சக்கரங்கள், இரும்பு உருக்கு உலை போன்ற பல வித பொருள்கள் கிடைத்துள்ளன. நெடு கற்கள் இங்கு கண்டறியப்பட்டன. இவ்வித கற்கள் பிரான்சு ஸ்வீடன், அயர்லாந்து, தென்அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்துள்ளன. நெடுங்கற்கள் ஒரு சில இடங்களில் கிடைக்கும். அதில் உழக்குடியும் ஒன்றாகும். உழக்குடி தொல்லியல் களமான ஆதிச்சநல்லூர், சிவகளை , கொற்கை மற்றும் தாமிரபரணி படுகையில் உள்ளது. எனவே உழக்குடி கிராமத்தினை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, அகழாய்வு மேற்கொள்ள உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை கடந்த 25 ந்தேதி விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோர் மத்திய மாநில அரசுகளில் தொல்லியல் துறை அதிகாரிகள் உழக்குடி கிராமத்துக்கு சென்று ஆய்வு செய்து அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணை யை பிப்பரவரி 17 க்கு தள்ளி வைத்தனர்.