பசுமை தமிழ் தலைமுறை மற்றும் காவல்துறை இணைந்து சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு சாலை விழிப்புணர்வு நடைபெற்றது. இதனை முறப்பநாடு காவல் ஆய்வாளர் திரு. பாஸ்கரன், சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.சுப்பிரமணியன் மற்றும் பசுமை தமிழ் தலைமுறை அமைப்பின் தலைவர் திரு. சுகன் கிறிஸ்டோபர் முன்னின்று நடத்தினார். நேதாஜி சுபாஷ் சேனை மாவட்ட செயலாளர் மு.கணேசன் மற்றும் பசுமை தமிழ் தலைமுறை அமைப்பின் நிர்வாகிகள் பூல்பாண்டியன்,தங்கராஜா,அருண்,செந்தில்முருகன்,பரமசிவம்,தங்கமுத்து செல்வம்,மாதவன்,தங்கப்பாண்டி என அனைவரும் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையான வசவப்புரம் காவல் சோதனை சாவடியில் அனைத்து வாகனங்களுக்கும் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும் வாகன ஒட்டிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.


