கலியாவூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன், மகன் பார்த்திபன்(8)
11 ந்தேதி மருதூர் அணையில் தவறி விழுந்துள்ளார்.
முறப்பநாடு போலிசார், ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத்துறையினர் அந்த சிறுவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆற்றில் தண்ணீரின் வரத்து அதிகரித்ததன் காரணமாக தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில் 13 ந்தேதி மூன்றாவது நாளாக பார்த்திபனை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் ட்ரோன் கேமரா கொண்டு சிறுவனை தேடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். கண்ணுககு எட்டும் தூரத்தில் எங்கேயும் சிறுவன் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
தூத்துக்குடி மாவட்ட சார் ஆட்சியர் சிம்ரான் ஜித் சிங் ஹாலோன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் வந்திருந்தனர். தூத்துக்குடியில் இருந்து முத்துக்குளிக்கும் மக்கள் வந்தனர். அவர்கள் தண்ணீர் போக்கு மூலமாக சிறுவனை தேடினர். தீயணைக்கும் படையினர் டீயூப் மூலமாக ஆற்றில் இறங்கி சிறுவனை தேடும் பணியில் ஈடுபட முயற்சி செய்தனர். ஆனால் ஆற்றில் தண்ணீர் இழுப்பு அதிகமான காரணத்தினால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.
தண்ணீர் வரத்து அதிகமானது மழையும் தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. எனவே சிறுவனை தேடும் பணி தடைப்பட்டது. இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில் ராஜ் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜெயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்த பார்வையிட்டனர். முறப்பநாட்டில் ஒரு தடுப்பணையும், பக்கபட்டியில் ஒரு தடுப்பணையும் உள்ளது. தற்போது 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் வருவதால் சிறுவனை தேடும் பணி சிரமப்படுகிறது. இந்த பகுதியில் முறப்பநாடு போலிசார் மற்றும் வருவாய் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்றாவது நாளும் காலை முதல் தேடும் பணி துவங்கியது. ஆனால் 46 ஆயிரம் அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மேலும் தேடுதலில் தேக்கம் ஏற்பட்டது.


