தாமிபரணி வெள்ளத்தில் புளியங்குளத்தில் கட்டப்பட்ட முதுமக்கள் தாழி தகவல் மையம் தண்ணீரில் மூழ்கியது. புளியங்குளத்தில் திருச்செந்தூர் மெயின்ரோட்டை தாண்டி தண்ணீர் விழுந்த காரணத்தினால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் நின்று சென்றது . இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மாலை 6 மணிஅளவில் திருச்செந்தூர் திருநெல்வேலி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வெள்ளத்தில் யாரும் இறங்கி விடக்கூடாது என்று செய்துங்கநல்லூர் போலிஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் தலைமையில் போலிசார் காவலில் ஈடுபட்டு ள்ளனர்.
வெள்ளத்தினை பார்வையிட ஆறாம்பண்ணை , கொங்கராயகுறிச்சி, அரபாத் நகர், கருங்குளத்தினை சேர்ந்த மக்கள் கருங்குளத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் வேடிக்கை பார்த்தபடி சென்றனர்.
முத்தாலங்குறிச்சி, சிவராம மங்கலம், கொங்கராயகுறிச்சி உள்பட பல பகுதிகளில் ஆற்று நீர் சுற்றி வளைக்கப்பட்டது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் மேடான பகுதிக்கு கொண்டு வரப்பட்டனர். தாமிரபரணி ஆற்று வெள்ளம் கடந்த 1992 ல் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 1 லட்சத்து 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது இந்த பத்திரிக்கை செய்தி ஏறும் போது ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 60 ஆயிரம் கன அடிதண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
இரவு மேலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை கொண்டாடும் இவ்வேளையில் நீண்ட நாளுக்கு பிறகு மழை பெய்தது தாமிரபரணியில் மிகச் சிறப்பானது என்று கருதப்படுகிறது.


