சாத்தான்குளம் வட்டார வேளாண் பெருமக்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்… நாளை 22.07.2020 புதன்கிழமை மதியம் 2 மணி அளவில் சாஸ்தாவிநல்லூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பொத்தகாலன்விளையில் வைத்து சாத்தான்குளம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில் மண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. கோவில்பட்டி மண் பரிசோதனை அலுவலர்கள் நமது பகுதியில் நேரடியாக விவசாயிகளின் நிலங்களின் மண் மற்றும் தண்ணீர் மாதிரிகள் பெற்று பரிசோதனை செய்து தர உள்ளனர். மண் மற்றும் தண்ணீர் பரிசோதனை செய்வதால் அவற்றின் வளம் மற்றும் குறைபாடு அறியப்படுகிறது. இதனால் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உரம் வைத்து நல்ல பலன்களையும் அதிக மகசூலையும் பெறலாம். மண் ஆய்வு கட்டணம் ஒரு மாதிரிக்கு ரூபாய் 20. தண்ணீர் ஒரு மாதிரிக்கு ரூபாய் 20. விவசாயிகள் தங்கள் பெயர் , தந்தை பெயர் ,ஊர் , போன் மற்றும் சர்வே எண் அல்லது பட்டா எண் ஆதார் எண் தகவல்களோடு மண் மற்றும் தண்ணீர் மாதிரிகள் எடுத்துக் கொண்டு வர சாத்தான்குளம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அலுவலகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த சம்மந்தப்பட்ட தகவல்களை இந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன் 9787854455, முனீஸ்வரி 7418411753 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். விவசாயிகள் தங்கள் மண் மற்றும் தண்ணீர் மாதிரிகள் எடுத்த வந்து பலன் பெறவும் ஆதரவு தரவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.