தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள கிராமபுறங்களில் பல்வேறு வீடுகளில் இரவு நேரங்களில் செல்போன் திருடு போவதாக புகார் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் செல்போன் திருடனை கண்டுபிடிக்க போலிசார் பல முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் செய்துங்கநல்லூர் போலிசார் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் தலைமையில் சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரனை செய்தனர். அப்போது அவர் கிராமபுறங்களில் செல்போன் திருடி வந்தது தெரிய வந்தது. மேலும் அவர் திருநெல்வேலி மாவட்டம், நொச்சிக்குளத்தைச் சேர்ந்த பவுன்ராஜ்(30) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ஒரு லேப்டாப், 11 செல்போன், 1 ஜோடி வெள்ளி கொலுசு என செய்துங்கநல்லூர் போலிசார் கைப்பற்றி மேலும் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.


