செய்துங்கநல்லூரில் அ.ம.மு.க. வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தனர்.
செய்துங்கநல்லூரில் அ.ம.மு.க கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி 13 வது கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ராஜாத்தி, ஒன்றிய கவுன்சிலர் 12 வது வார்டுக்கு போட்டியிடும் வேம்புதுரை, செய்துங்கநல்லூர் ஊராட்சி 7 வது வார்டு உறுப்பினர் உதவிக்கு போட்டியிடும் செங்கமல உடயார் என்ற சின்னதுரை ஆகியோர் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். அவர்கள் செய்துங்கநல்லூர் மேலத்தெரு, கஸ்பா வேளார் தெரு, ரயில்வே பீடர் தெரு, மெயின்தெரு, தென்னஞ்சோலை தெற்குத் தெரு உள்பட பல பகுதியில் வாக்கு சேகரித்தனர். அவர்களுடன் திரளான மக்கள் உடன் சென்றனர்.