மிக மோசமான நிலையில் உள்ள கருஙகுளம் &மூலைக்கரைப்பட்டி சாலையை சீரமைக்க வேண்டும் என்று ஊர் மக்கள்கோரிக்கை விடுத்துள்ளர்.
ஸ்ரீவைகுண்டம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது கருங்குளம்& மூலைக்கரைப்பட்டி சாலை. இந்த சாலை 15 மீட்டர் தொலைவை கொண்டது. இந்த சாலை வழியாக கருங்குளம், தாதன்குளம், தெற்கு காரசேரி வள்ளுவர் காலனி மக்கள் மட்டுமல்லாமல் இந்த பகுதயில் உள்ள சுற்று வட்டார கிராம மக்கள் செல்வதற்கு வசதியாக உள்ளது. ஆனால் இந்த சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள்.
இதுகுறித்து சேரகுளத்தினை சேர்ந்த இசக்கி முத்து கூறும் போது, எங்கள் பகுதியில் கருங்குளம் &மூலைக்கரைப்பட்டி சாலை மிக முக்கிய சாலையாகும். இந்த சாலையில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலை சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான சாலை மிக மோசமாக உள்ளது. இங்கு செல்லும் வாகனங்கள் பாரத்தினை தாங்க முடியாமல் சாலை பெயர்ந்து குண்டு குழியுமாக காட்சியளிக்கிறது. எனவே இந்த பகுதியில் செல்லும் பல இருசக்கரவாகனங்கள் விபத்தில் சிக்குகிறது. இந்த பிரச்சனை தீர்க்க உயிர் பலி வாங்கும் முன்பு சாலையை சீரமைத்து தரவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.