கருங்குளம் கிராம சாவடி தெருவை சேர்ந்தவர் கணபதி ஆண்டி(77). இவர் அதிமுகவில் முக்கிய பதவிகளில் இருந்தவர். தற்போது நோய்வாய்பட்ட இவர் படுக்கையில் இருந்தபடி மருத்துவம் பார்த்து வந்தார். நேற்று முன்தினம் கோயில் கொடை விழா என்பதால் வீட்டில் யாரும் இல்லை. கொடை பார்க்க சென்று விட்டார்கள். இதற்கிடையில் இவர் படுக்கைக்கையில் அருகே கொசுவர்த்தி ஏத்தி வைத்து விட்டு தூங்கியுள்ளார். எதிர்பாரத விதமாக கொசுவர்த்தி பற்றி எரிந்து, அதன் சுவாலைகள் போர்வையில் பற்றி எரிந்தது. இந்த தீ அவர் உடல் மீது பரவியது. இதற்கிடையில் வீட்டுக்குள் இருந்து புகை வருவதை கண்டு அதிர்ச்சியுற்றவர்கள் கதவை திறந்து பார்த்த போது, தீகாயத்துடன் கணபதி ஆண்டி துடித்துக்கொண்டிருந்தார். உடனே அவரை பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார். இது குறித்து செய்துங்கநல்லூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாணை நடத்தி வருகிறார்கள். கணபதி ஆண்டியின் மகன் சங்கரபாண்டியன் செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து கிளார்க் என்பது குறிப்பிடத்தக்கது.