
செய்துங்கநல்லூரில் எஸ்.டி.பி.ஐ கட்சி கிளைக்கூட்டம் நடந்தது. கிளைதலைவர் உமர்ஜமான் தலைமை வகித்தார். செய்துங்கநல்லூரில் 2 வார்டுகளில் கட்சி சார்பாக கட்சி வேட்பாளர் நிறுத்தவேண்டும். குடிநீர் சீராக பொதுமக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்றி நாய் தொல்லை தெருக்களில் அதிகம் ஊர்களில் உலாவுதால் உடனடியாக அதை அப்புறப்படுத்த வேண்டி மாவட்டஆட்சி தலைவரை சந்தித்து மனு கொடுப்பது ,மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தல், பசுமையை பாதுகாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நியாஸ், சிராஜ் ரியாஸ், சாகுல், வகாபு, உபைஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இஸ்மாயில் நன்றி கூறினார்.