ஸ்ரீ வைகுண்டம் தாலூகா கால்வாய் மிகப்பெரிய கிராமம். இந்த கிராமத்தில் மணிமுத்தாறு பாசன குளங்களும், தாமிரபரணி பாசன குளுங்குளம் ஊரைச்சுற்றி உள்ளது. இந்த கிராமத்தில் தற்போது அனைத்து குளங்களும் மறு கால் விழுந்து விட்டது . குறிப்பாக மணிமுத்தாறு பாசனம் கோவை குளம், குறிப்பன்குளம், திருவரங்க நேரி குளம் உள்படக் குளங்கள் மறுகால் விழுந்தது. இதனால் கால்வாய் இந்திரா காலனிககுள் வெள்ளம் புகுந்தது. தொடர்ந்து கால்வாய் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் கால்வாய் திருவரங்கப்பட்டி சாலையை வெட்டி விட்டனர். இதனால் தண்ணீர் குடியிருப்புக்குள் புகுந்தது. இதற்கிடையில் கால்வாய் குளம் உடையும் நிலையிலிருந்த காரணத்தினால் கால்வாய் குளத்துக்கு வரும் தண்ணீரைப் பிரதான கால்வாய்க்குத் திருப்பிவிட்டனர். தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தினால் பொதுமக்கள் மேடான பகுதிக்குச் செல்ல வலியுறுத்தப்பட்டனர். வெள்ளப்பாதுகாப்பு பணியில் ஸ்ரீ வைகுண்டம் வட்டாட்சியர் ராதா கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் சிவராமன், பஞ்சாயத்துத் தலைவர் சேகர், ஊராட்சி செயலாளர் காசி, பரணி தமிழ் அறக்கட்டளை நிறுவனர் சிவா உள்படப் பலர் ஈடுபட்டனர்.
தொடர்ந்து வெள்ளம் குடியிருப்புக்குள் புகாமல் இருக்கப் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செய்துங்கநல்லூர் காவல்நிலைய இன்ஸ்பெகடர் அருள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


