ஸ்ரீ வைகுண்டம் தாலூகா வல்ல குளம் பஞ்சாயத்து அரசர் குளம் கிராமம் நிறைந்தது. ஏற்கனவே இந்த குளத்திலிருந்த ஒரே ஒரு மடை பகுதாகி உடைந்து இருந்தது.இதை மணல் போட்டு விவசாயிகள் மூடி வைத்திருந்தனர். தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக அரசர் குளத்தில் மறுகால் விழுந்தது. அதோடு மட்டுமல்லாமல் மடைசரியில்லாத காரணத்தினாலும் சில இடங்களில் கரை உடையும் தருவாயில் இருந்த காரணத்தினாலும்
மறுகால் அருகில் விவசாயிகள் தண்ணீரை உடைத்து விட்டனர். இந்த தண்ணீர் அரசர் குளம் கிராமத்துக்குள்ளும், வயல்காட்டுககுள்ளும் புகுந்தது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இந்தப்பகுதியில் நீர்வரத்து அதிகமானது. வெள்ளம் பாதிக்கப்பட்ட இடத்துக்கு வல்ல குளம் கிராம நிர்வாக அதிகாரி சகதி, வல்ல குளம் பஞ்சாயத்து தலைர் கமலம்குமார் ஆகியோர் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடத்தினை பார்வையிட்டனர். தொடர்ந்து வெள்ளத்தினால் குடியிருப்பு பாதிக்கப்படாமல் இருக்க மேல் நடவடிக்கை எடுத்தனர். இதற்கிடையில் அரசர் குளம் – மணல் விளை சாலையில் தண்ணீர் செல்ல ஏதுவாக சாலையை உடைத்துவிட்டால் மட்டுமே வீட்டுக்குள் வெள்ளம் புகுந்து விடாமல் பாதுகாக்க முடியும். எனவே இதற்கான அதிகாரிகள் வரவை எதிர்நோக்கி மக்கள் காத்து கொண்டிருக்கிறார்கள்.