சட்டவிரோதமாக அனுமதியின்றி லாரியில் எம் சாண்ட் மணல் எடுத்துச் சென்றவர் கைது. – டிப்பர் லாரி மற்றும் 3 யூனிட் எம் சாண்ட் மணல் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரம் பத்மநாபமங்கலம் சாலையில் வந்து கொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் உரிய அனுமதியின்றி எம் சாண்ட் மணல் வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து அந்த லாரியின் ஓட்டுநரான ஆத்தூர் ஆசாரிமார் தெருவை சேர்ந்த மகாராஜன் மாயாண்டி பிரபு (24) என்பவரை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து டிப்பர் லாரியும், 3 யூனிட் எம் சாண்ட் மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.


