ஸ்ரீ வைகுண்டம் அணைக்கட்டில் வீணாகக்
கடலுக்குள் செல்லும் தண்ணீரை
சடையனேரி கால்வாயில் திருப்ப
சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்த்தராஜ் ஏற்பாடு
ஸ்ரீ வைகுண்டம் அணைக்கட்டிலிருந்து தண்ணீர் வீணாகக் கடலுக்குச் செல்வதை சடையநேரி கால்வாயின் மூலம் வைரவன் தருவை, புத்தன் தருவை குளங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்ல ஊர்வசி அமிர்த ராஜ் சட்டமன்ற உறுப்பினர் ஏற்பாடு செய்துள்ளார்.
தாமிரபரணி ஆற்றில் மருதூர் அணைக்கட்டில் மேலக்காலில் இருந்து பயன்பெறும் 16 குளங்களுக்கும் முன்னேற்பாடாகத் தண்ணீர் திறந்து தற்போது நிரம்பி உள்ளது. கால்வாய் குளம் முழு கொள்ளளவு நிரம்பி சடையநேரி கால்வாய் வழியோரகுளங்களான ஆதாலிகுளம், செங்குளம் மருத குளம், அய்யனார் குளம்,உடையார் குளம் வரை தண்ணீர் நிரம்பி உள்ளார். தற்போது எழுவரை முக்கி குளத்திற்குத் தண்ணீர் சென்று கொண்டிருக்கின்றது. மேலும் அங்கிருந்து மேலபுதுக்குளம், பொட்டைக்குளம், செம்பறிக்குளம், உள்படக் குளங்களுக்கும் வாய்க்கால்களுக்கும் சிறிதளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நங்கை மொழி வரை வந்து சேர்ந்துள்ளது.
500 கன அடி நீர் கால்வாய் குளத்திலிருந்து வெளியே கொண்டு செல்வதற்கு வசதியாகக் கால்வாய் குளத்தின் மறுகால் அருகே உள்ள அமலைச் செடிகளை அகற்ற வேண்டும். அதற்கான நடவடிக்கை பொதுப்பணித்துறை மூலம் எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பராமரிப்பு பணி செய்து அமலை செடிளை அகற்றித் தொடர்ந்து முழு கொள்ளளவு தண்ணீரை சடையநேரி கால்வாயில் கொண்டு செல்ல பொதுப்பணித்துறை மூலமாக ஏற்பாடு செய்துள்ளோம். சடையநேரிகுளம், வைரவன் தருவை, புத்தன் தருவை, குளங்களுக்குத் தண்ணீர் விரைவாகக் கொண்டு செல்வதற்கும், பருவமழை காலங்களில் தண்ணீர் வீணாகக் கடலுக்குள் செல்வதைக் குறைத்து ஸ்ரீ வைகுண்டம் தொகுதியிலுள்ள குளங்களை நிரப்புவதற்கு பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்த ராஜ் ஆலோசனை செய்து வருகிறார். எனவே விரைவில் புத்தன் தருவைக்குத் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்ல அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்த்தராஜ் ஏற்பாடு செய்துள்ளார்.


