செய்துங்கநல்லூர் அருகே பரிதாபம்
மின் விபத்தில் இறந்த கட்டிட தொழிலாளி
வறுமையில் வாடும் குடும்பம்
செய்துங்கநல்லூர் அருகே உள்ள வசவப்பபுரம் பஞ்சாயத்து அனவரதநல்லூர் கீழத்தெருவில் வசிப்பவர் அருணாசலதேவர் . இவரது மகன் மாரிமுத்து(42). இவர் கட்டிட தொழிலாளி. இவரு க்கு பேச்சியம்மாள்(32) என்ற மனைவியும் ஆறுமுகலெட்சுமி (14) காவேரி செல்வி (16) ஆகிய மகளும் உள்ளனர். இவரது தாயார் வெள்ளத்தாய், தந்தை அருணாசல தேவர் இறந்து விட்ட காரணத்தினால் மாரிமுத்து பராமரிப்பில்தான் வாழ்ந்து வந்தார். பேச்சியம்மாள் மனநிலைப் பாதிககப்பட்டவர். எனவே வயதான தாயாரையும், மனநிலை பாதி க்க ப்பட்ட மனைவியுடன் குழந்தைகளை பராமரி க்க கட்டிட வேலை க்கு சென்று வந்தார் மாரிமுத்து.
இதற்கிடையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 2 ந்தேதி திருநெல்வேலி மாவட்டம் கேடிசி நகர் உதயாபுரி நகரில் மாரிமுத்து கட்டிட வேலை செய்த போது மின் விபத்தில் இறந்து விட்டார். இது குறித்து தாலூகா போலிஸ் ஸ்டேஷன் வழ க்கு பதிவு செய்தனர். தற்போது இந்த வீட்டில் வயதான தாயார், மனநிலை பாதி க்கப்பட்ட மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இதுவரை அவரு க்க கிடை க்க வேண்டிய எந்த அரசு உதவியும் கிடை க்கவில்லை.
ஆறுமுகலெட்சுமி உள்ளூர் பள்ளியிலும், செல்வி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியிலும் படித்துவருகின்றனர்.த ற்போது ஏழ்மையின் காரணமாக படிப்பை தொடர முடியாத நிலையில் உள்ளனர்.
கட்டிட தொழிலாளி சங்கத்தில் மாரிமுத்து பதிந்து வைத்திருந்தார். ஆனால் அதை மறுபதிவு செய்யவில்லை. எனவே அரசு தொழிலாளர் சங்கம் மூலம் பணம் மறு க்கப்பட்டு வருகிறது. எனவே இந்த குடும்பத்து க்கு நீதி கிடை க்க தமிழக முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும் என இரு பெண் குழந்தைகளும் தமிழக முதல்வர் தனிப்பிரிவு, மற்றும் மாவட்ட ஆட்சி தலைவரு க்கு மனு அனுப்பியுள்ளனர்.
மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள இந்த குடும்பத்து க்கு தமிழக அரசு உதவி கிடை க்குமா என உள்ளூர் ம க்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.


