அய்யனார்குளம் பட்டியில்
ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு
இலவசகண்சிகிச்சை முகாம்
செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து அய்யனார்குளம் பட்டி பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இலவ கண்சிகிச்சை முகாம் நடந்தது. செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் சுடலை முத்து முன்னிலை வகித்தார். செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் முகாமை துவக்கி வைத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் நாகர் கோயில் பெசன்சிங் கண் மருத்துவ மனை குழுவினர் இலவசமாக பொதுமக்களுக்கு கண்களை சோதனை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் சுப்பையாபாண்டியன், முருகன், பொன்னையா, சித்திரை பாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர். பஞ்சாயத்து செயலர் சங்கரபாண்டி நன்றி கூறினார்.


