மேலஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகத்தில் இன்றைய தினம் கிராமப்புற குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர்களின் கடமைகள் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியை கிராம உதயத்தின் நிறுவன இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் கலந்துகொண்டு துவக்கி வைத்து கருத்துரை வழங்கினார். கிராம உதய கிளை மேலாளர் வேல்முருகன், தெய்வேந்திரபேரி மையத்தலைவர் பேச்சித்தாய், நாசரேத் மையத்தலைவர் எஸ்தர், ஸ்பிக் நகர் மையத்தலைவர் காளீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேல ஆழ்வார்தோப்பு கிளை அலுவல தன்னார்வ தொண்டர் பிரேமா வரவேற்புரை ஆற்றினார்.
தனி அலுவலர் ராமச்சந்திரன், சிறப்பு பொறுப்பாளர் சித்திரை பெருமாள், பகுதி பொறுப்பாளர் ஆறுமுகவடிவு ஆகியோர் பயிற்சி வழங்கினார்கள். பகுதி பொறுப்பாளர் முத்துசெல்வன் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


