கலியாவூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன், தச்சு தொழிலாளி. இவருக்கும் நாணல்காட்டை சேர்ந்த நிஷாந்திக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பார்த்திபன்(8), கார்த்திக்(5) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
இருவருக்கும் பள்ளி விடுமுறை காரணத்தினால் வீட்டில் இருந்த 2 மகன்களையும் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள மருதூர் அணைக்கட்டுக்கு வந்துள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக மூத்த மகன் பார்த்திபன் அணையில் தவறி விழுந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் முறப்பநாடு போலிசார், ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் அந்த சிறுவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆற்றில் தண்ணீரின் வரத்து அதிகரித்ததன் காரணமாக தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று 3வது நாளாக பார்த்திபனை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் ட்ரோன் கேமரா கொண்டு சிறுவனை தேடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். கண்ணுககு எட்டும் தூரத்தில் எங்கேயும் சிறுவன் பற்றிய தகவல் கிடைககவில்லை.
இதற்கிடையில் இன்று தூத்துக்குடி மாவட்ட சார் ஆட்சியர் சிம்ரான் ஜித் சிங் ஹாலோன் சம்பவ இடத்திற்கு வந்தார். அவருடன் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் வந்திருந்தனர். மேலும் நடைபெறும் பணியை துரிதப்படுத்த உத்தரவிட்டார். அதன் பின் தூத்துக்குடியில் இருந்து முத்துக்குளிக்கும் மக்கள் வந்தனர். அவர்கள் தண்ணீர் போக்கு மூலமாக சிறுவனை தேடினர். அதே வேளையில் தீயணைக்கும் படையினர் டீயூப் மூலமாக ஆற்றில் இறங்கி சிறுவனை தேடும் பணியில் ஈடுபட முயற்சி செய்தனர். ஆனால் ஆற்றில் தண்ணீர் இழுப்பு அதிகமான காரணத்தினால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.
மாலையில் தண்ணீர் வரத்து அதிகமானது மழையும் தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. எனவே சிறுவனை தேடும் பணி தடைப்பட்டது. இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில் ராஜ் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜெயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்த பார்வையிட்டனர். முறப்பநாட்டில் ஒரு தடுப்பணையும், பக்கபட்டியில் ஒரு தடுப்பணையும் உள்ளது. தற்போது 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் வருவதால் சிறுவனை தேடும் பணி சிரமப்படுகிறது. இந்த பகுதியில் முறப்பநாடு போலிசார் மற்றும் வருவாய் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்றாவது நாளும் காலை முதல் தேடும் பணி துவங்கியது. ஆனால் 46 ஆயிரம் அடி தண்ணீர்
மூன்றாவது நாளும் சிறுவன் கிடைக்காத காரணத்தினால் கலியாவூர் உள்ள சுற்றுபுற மக்கள் சோகத்துடன் உள்ளனர்.


