செய்துங்கநல்லூரில் புதிதாக பழுது பார்த்து திறககப்பட்ட சந்தையை கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் பார்வையிட்டார்.
செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான வாரசந்தை உள்ளது. இந்த சந்தையில் புதன்கிழமை தோறும் மக்கள் கூடுவார்கள். இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து பல்வேறு பொருள்களை விற்பனை செய்வார்கள். இந்த சந்தையில் கடந்த வருடத்தில் பொதுமக்கள் மிக அதிகமாக வர ஆரம்பித்த காரணத்தினால் வியாபாரிகள் எண்ணிக்கை அதிகமானது. இதனால் வியாபாரிகள் நெல்லை திருச்செந்தூர் சாலையில் இருபுறமும் ஆக்கிரமித்து கடைகள் வைத்தனர். இதனால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் சந்தையை மேம்படுத்தும் பணி துவங்கியது. இதனால் வியாபாரிகள் அனைவருமே சாலைக்கு வந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமானது. தொடர்ந்து கொரானா காரணமாக கடந்த மார்ச்சு ஏப்ரல் மாதம் சந்தை நடைபெறவில்லை. ஆனாலும் சந்தையை மேம்படுத்தும் பணி தொய்வில்லாமல் நடந்தது. இதில் சமுதாய நலக்கூடத்தில் உள்ள பகுதியிலும் பேவர் பிளாக் கல் அமைத்தல், வியாபாரிகள் வெயிலில் அமர்ந்து வியாபாரம் செய்யும் இடங்களிலில் மேற்கூரை அமைத்தல், கழிவறை வசதிகளை சீர் செய்தல், சமுதாய நலக்கூடம் உள்பட இடங்களை வெள்ளையடித்தல் போன்ற பணிகள் நடந்தது. கொரானா ஒரளவு கட்டுபாட்டுக்குள் வந்தவுடன் சந்தை மீண்டும் துவங்கியது. Êசந்தைக்குள் வேலை நடைபெற்ற காரணத்தினால் வியபாரிகள் உள்ளே சென்று வியாபாரம் செய்ய இயலவில்லை.. எனவே நடை பாதையிலும் மெயின் ரோட்டிலும் வைத்து வியாபாரம் செய்தனர். வியாபாரிகளின் வரத்து கடந்த 4 வாரத்தில் மிக அதிகமானது. எனவே புதன் கிழமை வந்து விட்டாலே செய்துங்கநல்லூரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டது. இதனால் விபத்து ஏற்படும் நிலமை ஏற்பட்டது.
இதற்குள் சந்தை பணி முடிவடைந்தது. நேற்று கருங்குளம் சேர்மன் கோமதி ராஜேந்திரன் சந்தையை துவககி வைத்தார்.
இந்த சந்தையில் மீன் மற்றும் கருவாடு வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள், பழ வியாபாரிகள், இனிப்பு பண்டங்கள் செய்யும் வியாபாரிகள் உள்பட வியாபாரிகளுக்கு தனிதனி இடம் ஒதுக்கப்பட்டு, அவர்களை சந்தைக்குள் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று மற்றும் நாளை பொங்கல் பண்டிகை சிறப்பு விற்பனை சந்தைக்குள் நடைபெறுகிறது. இதை கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் செல்வி பார்வையிட்டார். அவருடன் அலுவலர் மைக்கேல், மணிகண்டன், ஹரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


