ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகத்தில் இன்று ஏழை பெண்கள், முதியோர்கள், ஆதரவு அற்ற பெண்கள் விதவை பெண்கள் கணவரால் கைவிடப்பட்ட ஆதரவு அற்ற பெண்களுக்கு 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு 100 நபர்களுக்கு இலவச சேலைகள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவை ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். அதன்பின்னர் அவர் இலவச சேலைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு கிராம உதயம் நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். கிராம உதயம் நிர்வாக பொறுப்பாளர் இராமச்சந்திரன் வரவேற்புரை வழங்கினார். ஓய்வுபெற்ற ஆர்டிஓ வெங்கடாச்சாரி, கிராம உதயம் பகுதி பொறுப்பாளர்கள் கண்ணன், பிரேமா, ஆறுமுக வடிவு ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள். கிராம உதயம் தன்னார்வ தொண்டர் இசைவேந்தன் நன்றி கூறினார்.


