அனவரதநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வசவப்பபுரம் சமூக நல அறக்கட்டளை சார்பில் இலவச கணிணி வழங்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் சங்கரநாரயணன் தலைமை வகித்தார். தமிழ் ஆசிரியர் பட்டுராஜன் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவி அமுதா வரவேற்றார். வசவப்பபுரம் சமூக நல அறக்கட்டளை நிர்வாகிகள் இலவச கணிணியை பள்ளிக்கு வழங்கினர். முன்னாள் மாணவர் அந்தோணி ராஜ் உள்பட ஆசிரியர்கள் அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டனர். மாணவி ரோஸ்லின் ஜெமீலா நன்றிகூறினார்.