கருங்குளம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் ராமசந்திரன். கூலி தொழிலாளி. இவருக்கு 3 பெண் , 1 ஆண் குழந்தை உள்ளது. இதில் மூத்த மகள் சத்தியா(24). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக பல இடத்தில் மருத்துவம் பார்த்து வருகிறார்கள். ஆனால் குணமாகவில்லை. இதற்கிடையில் நேற்று காலை 9 மணிக்கு வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வெளியே சென்ற சமயத்தில் சத்தியாவுக்கு வயிற்று வலி வந்தது. வலி தாங்க முடியாமல் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் செய்துங்கநல்லூர் போலிஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் உடலை கைபற்றி பாளை அரசுமருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து அவர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.