வல்லநாடு அருகே உள்ள வசவப்பபுரம் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் வேம்பு. முன்னாள் ராணுவ வீரர். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இரவது மனைவி வள்ளித்தாய்(84). வேம்பு இறந்த காரணத்தினால் அவருடைய குடும்ப ஓய்வூதியத்தை வள்ளித்தாய் வாங்கி வந்தார்.
குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்காக கடந்த 3 ந்தேதி காலை வல்லநாட்டில் உள்ள வங்கிக்கு செல்ல வசவப்பபுரம் பஸ் நிலையத்துக் வந்தார். அதன் பின் சாலையை கடக்க முயற்சிக்கும் போது, அவர் மீது தூத்துக்குடியில் இருந்து கேரளா, கொஞ்சினுக்கு பாமாயில் ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வள்ளித்தாய் முகம் மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு மோசமான நிலையில் அவரை பாளை அரசு மருத்துவ மனையில் கொண்டு சேர்ந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று முன்தினம் மாலை அவர் உயிரிழந்தார். இது குறித்து முறப்பநாடு போலிசார் வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த கேரளாவைச் சேர்ந்த விஜி(40). என்பவரை கைது செய்தனர்.


