செய்துங்கநல்லூர் அருகில் உள்ள கருங்குளத்தில் பனை ஓலையில் வேளாங்கண்ணி கோயிலை செய்து பனைத்தொழிலாளி அசத்தியுள்ளார்.
கருங்குளம் காமராஜர் தெருவை சேர்ந்வர் பால்பாண்டி(60). இவர் பனை தொழிலாளி . இவர் பனையோலையில் பல்வேறு சிலைகளை ஏற்படுத்தி வருகிறார். 7 அடிய உயர காமராஜர் சிலை, அப்துல் காலாம் சிலை, உழவன், உழத்தி , ஜெயலலிதா உள்பட பல்வேறு உருவங்களை இவர் பனை ஓலையில் செய்துள்ளார். இந்த வருட கிறிஸ்துமஸை முன்னிட்டு இவர் பனை ஓலையில் வேளாங்கண்ணி கோயில் சிற்பத்தினை மிகச்சிறப்பாக செய்துள்ளார். இவர் செய்த பனை ஓலை பொருள்களை தனது வீட்டில் பார்வைக்கு வைத்துள்ளார். இதை பல்வேறு மக்கள் ரசித்து பார்த்த வண்ணம் செல்கின்றனர்.


