ஆழிகுடி ஊராட்சியில் பொதுமக்களுககு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு மரக்கன்று நடப்பட்டது.
ஆழிகுடி ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் முத்து முன்னிலை வகித்தார். ஸ்ரீனிவாச சேவைகள் அறக்கட்டளையை சேர்ந்த செல்வராணி நிலவேம்பு கசாயத்தினை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மரக்கன்று நடப்பட்டது. சமூக சேவகர் தினேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


