செய்துங்கநல்லூரில் அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆர் நினைவு விழா அனுசரிக்கப்பட்டது. இதில் சண்முகநாதன் எம்.எல்.எ கலந்துகொண்டார்.
இதற்காக எம்.ஜி.ஆர் படம் செய்துங்கநல்லூர் பஜாரில் வைக்கப்பட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கருங்குளம் ஒன்றிய எம.ஜி.ஆர் மன்ற செயலாளர் முருகையாபாண்டியன் தலைமை வகித்தார். அவை தலைவர் திருப்பாற்கடல், கருங்குளம் ஒன்றிய வடக்கு செயலாளர் லெட்சுமணபெருமாள், கருங்குளம் ஒன்றிய பெருந்தலைவர் கோமதி ராஜேந்திரன் எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய செயலாளர் பரமசிவன் ஆகியோர் முன்னிலை வ கித்தனர். சிறப்பு அழைப்பாளராக சண்முகநாதன் கலந்துகொண்டு எம்.ஜி.ஆர் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளம்பெண் பாசறை சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் அய்யாத்துரை பாண்டியன், திருவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள், இலக்கிய ஒன்றிய தலைவர் அந்தோணிகுமார், 10 வார்டு ஒன்றிய கவுன்சிலர் சுடலைமுத்து, ஒன்றிய துணை செலயாளர் சுப்பையா பாண்டியன், நாட்டார்குளம் கந்தசாமி, விவசாய அணி ஒன்றிய செயலாளர் மாரியப்பன், சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளர் கோதர், கிளைச்செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.