செய்துங்கநல்லூரில் விவசாயிகளுக்கு வீரவணக்கம் நடந்தது. வேளான் சட்ட மசோதாவை வபாஸ் வாங்க வலியுறுத்தி டெல்லி பேராடி வீர மரணம் அடைந்த விவசாய தோழர்களுக்கு வீர வணக்க கூட்டம் செய்துங்கநல்லூர் மற்றும் கொங்கராயகுறிச்சியில் நடந்தது. விவசாய சங்க கருங்குளம் ஒன்றிய தலைவர் மணி தலைமை வகித்தார். சி.பி.எம். ஒன்றிய செயலாளர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு ஒருங்கிணைப்பாளர் கண்ணன், புளியங்குளம் தோழர் நடராஜன் ,அரியநாயக புரம் சின்னதுரை, கொங்கராயகுறிச்சி பாலகிருஷ்ணன், ஆப்ரகாம், திருச்செந்தூர் பட்டி கணேசன், செய்துங்கநல்லூர் காதர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


