செய்துங்கநல்லூர் சி.எஸ்.ஐ ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. இந்த விழாவையட்டி கிறிஸ்துமஸ் தாத்தா வீதி உலா வந்தார். இவர் தென்னஞ்சோலை தெரு, ஆர்.சி.கோயில் தெரு, சி.எஸ்.ஐ கோயில் தெரு, கஸ்பா வேளாளர் தெரு, ரயில்வே ஸ்டேஷன் தெரு போன்ற இடங்களுக்கு சென்று குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். சேகர குரு ஏசுபாதம் தலைமையில் துணை குரு ரஞ்சித், உபதேசியார் பென்மேத்யூ உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


