தாமிரபரணியில் இன்று விவாசயத்துக்கு தண்ணீர் திறப்பு
அமைச்சர் கடம்பூர் ராஜிவுக்கு
அதிமுக சிறுபான்மையினர் ஓ.பி. முஸ்தபா நன்றி.
தாமிரபரணி ஆற்றில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 7 கால்வாய்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 4 கால்வாய் களின் கீழூள்ள நேரடி மற்றும் மறைமுக பாசன பரப்புகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர் த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களின் வேண்டுகோளை ஏற்று தாமிரபரணி ஆற்றில் உள்ள அனைத்து பாசன பரப்புகளுக்கும் இன்று 1 ந்தேதி முதல் 31.03.2021 வரை 151 நாட்களுக்கு 14351.67 மி.க அடிக்கு மிகாமல் தண்ணீரை திறந்து விட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டுள்ளார். இதனால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் 86,107 ஏக்கர் பாசன வசதி பெறும்.
விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் செய்துங்கநல்லூரை சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட சிறுபான்மை பிரிவு அ.தி.மு.க செயலாளர் ஓ.பி. முஸ்தபா செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்புர் ராஜி அவர்களை கடம்பூர் சிதம்பர புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, தாமிரபரணி ஆற்றில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து, அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார்.


