செய்துங்கநல்லூர் பஜாரில் தேவர் ஜெயந்தி விழா நடந்தது. இதற்காக அலங்கரிககப்பட்ட தேவர் படத்துக்கு செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் மாலை அணிவித்தார். இந்த நிகழச்சியில் விவசாய சங்க தலைவர் குமார், ராஜ் பாண்டியன், ஜெயலலிதா பேரவை செயலாளர் கதிரேசன், வியாபாரிகள் சங்க பொருளாளர் பால்சாமி, குட்டி, வழக்கறிஞர் தில்லை, இந்து முன்னணி இசக்கி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதே போல் விட்டிலாபுரம், தூதுகுழி, கருங்குளம், தெற்கு காரசேரி, கால்வாய் உள்பட பல இடங்களில் தேவர் ஜெயந்தி விழா குதுகுலமாக கொண்டாடப்பட்டது.


