அம்மாவின் வழியில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க நீங்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று அரசர்குளத்தில் நகரும் ரேசன் கடைடைய திறந்து வைத்து ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் பேசினார்.
தமிழகம் முழுவதும் நகரும் நியாயவிலைக்கடையை கடந்த வாரம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார். கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜீவும் நகரும் நியாயா விலைகடையை துவக்கி வைத்தார்.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அடைக்கலாபுரம், புதுநயினார்புரம், பட்டாண்டிவிளை, கருங்குளம் ஒன்றியம் எல்லைநாயக்கன்பட்டி பஞ்சாயத்து சீத்தார்குளம், வல்லகுளம் பஞ்சாயத்து புதுக்குளம், அரசர்குளம், சேரகுளம் பஞ்சாயத்து வெட்டிக்குளம் ஆகிய 7 கிராமங்களில் அம்மா நகரும் நியாவிலைக்கடையை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் துவக்கி வைத்தார்.
அரசர்குளத்தில் நடந்த விழாவிற்கு கருங்குளம் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் வழக்கறிஞர் கே.வி. மகாராஜன் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகரன், கூட்டுறவு வங்கி துணை இயக்குனர் சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்றார். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. சண்முகநாதன் நகரும் ரேசன் கடையை துவக்கி வைத்த பின்னர் அவர் பொதுமக்களிடம் பேசினார். அப்போது அவர் பேசுகையில், அரசர்குளத்துக்கு ரேசன் கடை வேண்டி கடந்த 15 வருடங்களாக போராடி வருகிறீர்கள். நானும் அதற்காக போராடினேன். ஆனால் குறைந்த ரேசன் கார்டு இருந்த காரணத்தினால் அந்த திட்டம் நிறைவேற்ற முடியவில்லை. இதுபோன்ற கிராமங்களை தன்னிறைவு படுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் நகரும் ரேசன் கடை திட்டத்தினை அறிமுக படுத்தியுள்ளார். அதன் படி இன்று நாங்கள் அரசர்குளம், புதுக்குளம், வெட்டிகுளம் உள்பட 7 இடங்களில் நகரும் ரேசன் கடையை துவக்கியுள்ளோம். இதுபோன்று அம்மா செய்த அனைத்து நல்ல செயல்களையும் அவர் வழியில் தொடர்ந்து செய்து அவரது வழியில் பயணித்துக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமியை நீங்கள் அனைவரும் ஆதரவளித்து வருகின்ற தேர்தலில் வெற்றிபெற செய்து மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆக்க வேண்டும் என்று பேசினார்.
இந்த கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அதிகாரி ராஜேஷ்வரி, வல்லகுளம் பஞ்சாயத்து தலைவர் கமலம் கிருஷ்ணகுமார், கவுன்சிலர் மாடத்தி, மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருபாற்கடல், முன்னாள் ஆழ்வார்திருநகரி சேர்மன் விஜயகுமார், கூட்டுறவு சார்பதிவாளர் சரவண பெருமாள், கூட்டுறவு சங்க மேலாளர் மாரியப்பன், வேலாயுதம், வல்லகுளம் ரேசன் கடை பாலசுப்பிரமணியன், வல்லகுளம் கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன், அதிமுக கிளை செயலாளர் மாயாண்டி, நயினார் குமார். அதிமுக கருங்குளம் ஒன்றிய மாணவரணி முருகையா பாண்டியன், ஐயப்பன், அந்தோணி குமார், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கவுன்சிலர் மாடத்தியம்மாள் தாமிரபரணி கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு வெள்ளக்கால் திட்டத்தில் தெற்கு காரசேரி, கிளாக்குளம், அரசர்குளம் உள்பட சுற்றுபகுதியில் உள்ள குளங்களை சேர்க்க வேண்டும் என மனுகொடுத்தார். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சண்முகநாதன் எம்.எல்.ஏ கூறினார்.
முன்னதாக புதுக்குளத்தில் நகரும் ரேசன் கடையை திறந்து வைத்துபேசினர். வெட்டிகுளத்தில் நகரும் ரேசன் கடையை திறந்து வைத்த போது, ஊர் பொதுமக்கள் சார்பில் அந்தோணி முத்து என்பவர் இவ்வூருக்கு பஸ் வசதி செய்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


