
ஆழ்வார்திருநகரி டாக்டருக்கு கொரானாவில் சிறப்பு பணி புரிந்த காரணத்தினால் கான்பூரில் வைத்து விருது வழங்கப்பட்டது. அழ்வார்த்திருநகரியை சேர்த்த .கலைச்செல்வன் மற்றும் ஓய்வு பெற்ற டாக்டர் பெட்ரிசியா அவர்களின் மகன் டாக்டர் ஜப்ரி. இவர் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆக்ரா எஸ்.என். மெடிக்கல் கல்லூரியில் மேற்படிப்பு படித்து அப்பல்கலைக்கழகத்தில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்கள்.தற்போது இவர் இருதயவியல் மயக்க மருந்து மருத்துவராக கான்பூர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து பணி புரிந்து வருகிறார்கள்.
தற்போது இவர் கொரோனா வார்டில் சிறப்பாக பணியாற்றிய வகைக்காக சிறந்த மருத்துவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான விருதை கான்பூரில் நடந்த விழாவில் மாநில எம்.பி. சிங் பாகல் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.