கருங்குளத்தில் பாரத பிரதமர் மோடி பிறந்தநாள் விழா நடந்தது.
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு கருங்குளம் ஒன்றிய பாஜக சார்பாக விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதையட்டி அதிகாலை சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோயிலில் சிறப்பு யாகம், அன்னதானம் நடந்தது. தொடர்ந்து கருங்குளம் பேருந்து நிலையத்தில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அதன் பின் ஏழை எளியவர்கள் 70 பேருக்கு அரிசி உணவு பொருள் வழங்கப்பட்டது. மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் கேசவன், வெளிநாடு வாழ் தமிழர் நலன் பிரிவு மாவட்ட தலைவர் குணசேகர், வர்த்தக மாவட்ட செயலாளர் வசந்த குமார், சிறுபான்மை பிரிவு கேபிள் குமார், ஒன்றிய துணை தலைவர் ராஜ், ஒன்றிய செயற்குழு ஆறுமுக நயினார், ஒன்றிய துணை தலைவர் ஏ.கே. முத்து, முத்துகுமரன், பாரமுத்து, மாவட்ட தலைவர் பட்டியல் அணி ஆறுமுகம், மாவட்ட செயலாளர் இளைஞர் ணி ஒன்றிய செயற்குழு சுகுமார், சரவணன், ஒன்றிய பொது செயலாளர் தங்கராஜ், சாமுவேல் , முருகப்பெருமாள் மைக்கேல், ரவி, தெனாலி ராமசாமி, த. சுரேஷ், நல்லகண்ணு, மாவட்ட வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் ராம்குமார் மற்றும் கட்சி தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டனர்.