செய்துங்கநல்லூரில் சுகாதார பணிகள் சார்பில் அதிரடி ஆய்வு நடந்தது. இதில் முக கவசம் அணியாமல் பஜாரில் திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலூகா செய்துங்கநல்லூரில் அதிகமான மக்கள் கூடும் பஜாரில் முககவசம் அணியாமல் அழைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பெரியசாமி தலைமையில் சுகதார ஆய்வாளர் சண்முகநாதன், சீனிவாசன், சண்முகபெருமாள், முத்துகுமார், ஷாகீர் ஆகியோர் கொண்ட குழுவினர் செய்துங்கநல்லூர் பகுதி சந்தையில் ஆய்வு நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது முககவசம் அணியாமல் வந்தவர்கள் மீதும், பொது இடத்தில் எச்சில் துப்பிய நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து, அவர்களுககு ரூபாய் 200வீதம் அபராதம் விதித்தனர்.
மேலும் கடைகாரர்களிடம் முக கவசம் அணியாமல் வருபர்களை தடுக்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவிருத்தப்பட்டது. காவல் துறை மூலமாகவும், கிராம நிர்வாக அதிகாரி மூலமாகவும், வருவாய் ஆய்வாளர் மூலமாகவும் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும் கூட செய்துங்கநல்லூர் முககவசம் அணியாமல் கூடுபவர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது.


