முத்தாலங்குறிச்சிக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கொரோனோ நோய்தொற்று காரணமாக கடந்த 6 மாதம் பேருந்து இயக்கப்படவில்லை. இதனால் போக்குவரதது முழுவதும பாதிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் இந்த பகுதியில் செய்துங்கநல்லூர், கருங்குளம் , இராமனுஜம்புதூர் ஆகிய இடங்களுக்கு கடந்த 10 நாள்களுக்கு முன்பு அரசு பேருந்து இயக்கப்பட்டது. இதில் செய்துங்கநல்லூர் வரும் பேருந்தை காலை மாலை இரண்டு வேளை முத்தாலங்குறிச்சிக்கு இயக்கி வந்தனர். ஆனால் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் சில வேளைகளில் பேருந்தை முறையாக இயக்காமல் அருகில் விட்டிலாபுரம் கிராமத்தில் பேருந்தை இடையிலேயே நிறுத்தி, திருப்பி கொண்டு வந்து விடுகிறார்கள். இதனால் இந்த பேருந்து முத்தாலங்குறிச்சி வரும் என காத்து நிற்கும் மக்கள் ஏமாற்றமடைகிறார்கள்.
முத்தாலங்குறிச்சிக்கு கொரோனா காலங்களுக்கு முன்பு வரை அரசு பேருந்து 3 ஜி 5 தடவையும், தனியார் பேருந்து மூன்று தடவையும் இயக்கப்பட்டு வந்தது. தற்போது எந்த பேருந்தும் இங்கு இயக்கப்படவில்லை. எனவே நாட்டார்குளம், கொள்ளீர் குளம், விட்டிலாபுரம், இந்திராகாலனி, முத்தாலங்குறிச்சி உள்படகிராம மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். எனவே உடனடியாக முத்தாலங்குறிச்சிக்கு அரசு பேருந்து இயக்கவேண்டும் என்ற பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.