மாவட்ட ஆட்சி தலைவரை விட அதிகமாக தொழில் வரி செலுத்தும் சத்துணவு ஊழியர்கள், ஒன்றிய ஆணையாளரிடம் மனு கொடுத்துள்ளனர்.
கருங்குளம் சத்துணவு ஊழியர்கள் சங்க தலைவர் சீனிவாசன், மாவட்ட துணை தலைவர் வேல்முருகன் ஆகியோர் கருங்குளம் ஒன்றிய ஆணையாளரிடம் மனு ஒன்று கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது.
கருங்குளம் ஒன்றியத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தொழில்வரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செலுத்தி வருகிறோம். எங்கள் சத்துணவு ஊழியர்களுக்கு முறையாக ரூ.75001 க்கு மேல் பெறும் ஊழியர்கள் செலுத்த வேண்டிய தொகை ரூ.1250/& மட்டுமே ஆனால் நமது ஒன்றியத்தில் 2019 & 2020 ல் ரூ.1250க்கு பதில் ரூ.1480 பல ஊழியர்களுக்கு பிடித்தம் செய்தார்கள். இதை அன்றே ஆணையாளர் அவர்களிடம் தெரிவித்தும் தற்போது 2020 & 2021ம் ஆண்டு முதல் பருவத்திற்கு ரூ.1480 பல ஊழியர்களிடம் தொழில்வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் முறையான தொழில் வரி 1250 மட்டுமே பிடித்தம் செய்ய ஆவண செய்யும்படி கேட்டுக் கொள்கிறது.
என்று குறிப்பிட்டு இருந்தனர்.
மாவட்ட ஆட்சி தலைவர் தொழில்வரியாக கட்டும் பணத்தினை விட தற்போது சத்துணவு ஊழியர்களிடம் வசூலிக்கும் தொழில் வரி அதிகமாகும். எனவே குறைந்த சம்பளத்தில் கஷ்டப்படும் எங்களுக்கு உரிய தொழில் வரி வசூலிக்க வேண்டும் என்று மாவட்ட துணை தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்தார்.


