வல்லநாடு கிள்ளிகுளம் வேளாண்மை பல்கலைக்கழக கல்லூருயில் கருங்குளம் யூனியனில் மானாவாரியில் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம் 2020&21 சார்பாக கருங்குளம் வட்டார வேளாண்மைத்துறையின் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது.
இந்த பயிற்சி கூட்டத்தில் ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், பயிர் சாகுபடி செய்தல் மற்றும் தீவனப்பயிர் வளர்த்தல் சார்பான பயிற்சிகள் கல்லூரி பேராசிரியர்களால் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கித்தங்கம் வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட வேளாண்மைத்துறை துணை இயக்குநர் (மத்திய அரசு திட்டம்) தமிழ்மலர் தலைமை வகித்தார். கிள்ளிக்கும் வேளாண்மை கல்லூரியின் முனைவர் இறைவன் அருட்கனி அய்யநாதன் வாழ்த்துரை வழங்கினார்.
ஒருங்கிணைந்த பண்ணையத்தின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் பற்றிய பயிற்சிகளை முனைவர் ஹேமலதாவும், மண்புழு உரத்தொட்டி அமைத்தல் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் போன்ற தொழில்நுட்பங்களை முனைவர் ஜெபர்லின் பிரபினாவும், தீவனப்பயிர்களின் ரகங்கள் மற்றும் தீவனப்பயிர் சாகுபடி செய்யும் தொழில்நுட்பம் பற்றி வாகைகுளம் வேளாண் அறிவியல் நிலைய ஆராய்ச்சியாளர் முருகனும் வழங்கினார்கள்.
கருங்குளம் வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஆனந்தன் மானாவாரியில் ஒருங்கிணைந்த பண்ணையம் சார்பாக பயிற்சி வழங்கிய அனைத்து வேளாண் பல்கலையின் பேராசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டினை கருங்குளம் வட்டார ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் இளநிலை ஆராய்ச்சியாளர் சிந்தியா மற்றும் கருங்குளம் வட்டார துணை தொழில்நுட்ப மேலாளர் ராஜலெட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.