தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் அருள்மிகு ஸ்ரீசங்கரலிங்க சுவாமி உடனுறை அருள்தரும் ஸ்ரீ கோமதி அம்பாள் கோயிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் ஆடித்தபசு திருவிவா ஆண்டு தோறும் விமர்ச்சையாக நடைபெறும் நடப்பு ஆண்டு திருவிழா கரோனா தடுப்பு பணியால் அரசு விதித்துள்ள நடைமுறைப்படி ஆடித்தபசு திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.
முன்னதாக காலை கணபதிஹோமம் , லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இதையடுத்து கோயில் முன்பிருந்த கொடி மரத்துக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து காலை 6மணிக்கு திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. அம்பாள், சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது இதில் அரசு விதிப்படி பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு முகக்கவசம் அணிந்து வந்து சுவாமியை வழிப்பட்டனர்.
இத்திருவிழா ஆக.2ஆம்தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. நிறைவு நாளான ஆக.2ம்தேதி மாலை 7மணிக்கு சிகர நிகழ்ச்சியான தபசு காட்சி. அதனை தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெறுகிறது. இதையொட்டி கோயிலில் குருகால்பேரி, பெருமாள்குளம் சாலைப்புதூர், தேர்க்கன்குளம், விராக்குளம், ஸ்ரீவெங்கடேஸ்வர புரம், பழனியப்பபுரம், தெற்கு பேய்க்குளம், கோமாநேரி, சங்கரநயினார் புரம், மீரான்குளம் ஆகிய ஊர் பொதுமக்கள் சார்பில் வியாழக்கிழமை (23ஆம்தேதி முதல் ஆக. 2ஆம்தேதி வரை பல்வேறு, அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


