செய்துங்கநல்லூர் யூனியன் அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. துணை சேர்மேன் லட்சுமண பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்புலட்சுமி, வெங்கடாசலம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமணன், ஒன்றிய பொறியாளர் சித்திரை சேகர், முன்னிலை வகித்தனர் . கூட்டத்தில் கொராணா வைரஸ் பரவலை தடுக்க தினசரி தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் சுகாதாரத் துறை பணியாளர்கள் வருவாய்த்துறையினர் கவுன்சிலர்கள் அனைவருக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கருங்குளம் யூனியனுக்கு உட்பட்ட முப்பத்தொரு ஊராட்சி களுக்கான குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் சாலை பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு மொத்தம் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோமதி ராஜேந்திரன், லட்சுமண பெருமாள், சண்முகம், மணிகண்டன், அண்ணாமலை, முத்துராமலிங்கம், வசந்தி, மைமுன், சுடலைமுத்து, பொன்ராணி, சுந்தரி, சுப்புலட்சுமி, மாடத்தி, அன்னலட்சுமி, கம்மாடிச்சி, அரசு ஒப்பந்தகாரர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


