தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 415 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் தினசரி கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 415 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.175 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் 2472 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் மட்டும் 415 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


