செய்துங்கநல்லூர் அரசு நூலகத்தில் நூலகராக பணியாற்றியவர் துரைராஜ் ( வயது 53). இவர் நேற்று முன்தினம்( 23 ந்தேதி) மதியம் 1 மணி அளவில் செய்துங்கநல்லூர் நூலகத்தினை விட்டு வெளியே வந்து டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. எனவே மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை பாளை அரசு மருத்துவ மனையில் கொண்டு சென்றனர். அவர் செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது உடல் ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று மதியம் 2 மணிக்கு தகனம் செய்யப்பட்டது. அவர் உடலுக்கு மாவட்ட நூலக அதிகாரி ராமசங்கர், கண்காணிப்பாளர் பிரம்மநாயகம், செய்துங்கநல்லூர் வாசகர் வட்ட தலைவர் திருமலை நம்பி, துணைத்தலைவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, உறுப்பினர்கள் முத்துசாமி, இராசேந்திரன், நூலகர்கள் வல்லநாடு தளவாய், ஆழ்வார்திருநகரி சம்சூதீன், தென்திருப்பேரை பொன்னையா, திருச்செந்தூர் மாதவன், அரசு ஊழியர் சங்கத்தினை சேர்ந்த ஜேம்ஸ் முத்துபாண்டியன், சி.என்.டியை சேர்ந்த முருகன் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.


